பால் விற்பனையில் ஒரே ஆண்டில் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் குஜராத் மூதாட்டி!

பால் விற்பனையில் ஒரே ஆண்டில் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் குஜராத் மூதாட்டி!

நவல்பெண் தால்சங்பாய்

இது குறித்து பேசிய நவல்பெண் தால்சங்பாய், " எங்கள் வீட்டில் 40 எருமை மாடுகளும், 45 பசுக்களும் உள்ளன. 2019 ஆம் ஆண்டு 87.95 லட்சத்துக்கு பால் விற்பனை செய்தேன். பனஸ்கந்தா மாவட்டத்தில் அதிக பால்விற்பனை செய்தவர் நான் தான் என்றும் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
குஜராத்தை சேர்ந்த 62 வயதான மூதாட்டி ஒருவர், பால் விற்பனை மூலம் கடந்த ஆண்டில் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முன்னால் வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. அதற்கு தற்போதைய சரியான உதாரணம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நவல்பென் தால்சங்பாய் சவுத்ரி (Navalben Dalsangbhai Chaudhary). 62 வயதான அந்த பெண்மணி கடந்த ஆண்டில் பால் விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் வருமானமாக ஈட்டியுள்ளார்.பன்ஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா கிராமத்தில் (Nagana) நவல்பென் வசித்து வருகிறார். தனது வீட்டில் 80 எருமை மாடுகள், 45 பசுக்களை வளர்த்து வரும் அவர், பால் விற்பனை மூலம் மாதந்தோறும் ரூ.3,50 லட்சம் சம்பாதித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில் 87 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக இருந்த அவரின் வருமானம் கடந்த ஆண்டில் ஒரு கோடியை கடந்துள்ளது. சிறந்த தொழில்முனைவோராக இருக்கும் அவர், தனக்கு உதவியாக 15 பேரை பணிக்கு நியமித்துள்ளார். 

அவர்கள் எருமை மற்றும் பசுக்களை கவனித்துக்கொள்ள வேண்டும். அமூல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட டாப் 10 சிறந்த லட்சாதிபதி கிராமப்புற பெண் தொழில்முனைவோர் (10 Millionaire Rural Women Entrepreneurs) பட்டியலில் நவல்பென் முதலிடம் பிடித்து அசத்தினார். மேலும், பனஸ்கந்தா மாவட்டத்தின் சார்பில் வழங்கப்படும் 'Best Pashupalak' விருதினை மூன்று முறையும், லக்ஷ்மி விருதை இருமுறையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.  

Also read... ஊரடங்கு போடப்பட்ட சிறிது நேரத்தில் கனடா தம்பதி செய்த வினோத செயல்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!

இது குறித்து பேசிய நவல்பெண் தால்சங்பாய், " எங்கள் வீட்டில் 40 எருமை மாடுகளும், 45 பசுக்களும் உள்ளன. 2019 ஆம் ஆண்டு 87.95 லட்சத்துக்கு பால் விற்பனை செய்தேன். பனஸ்கந்தா மாவட்டத்தில் அதிக பால்விற்பனை செய்தவர் நான் தான். 2020 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து இந்த ஆண்டும் மாவட்டத்தில் முதல் இடத்தில் இருக்கிறேன்",எனத் தெரிவித்தார். பால் விற்பனையில் 62 வயதான பெண் ஒருவர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவது, தொழில்புரியும் பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. 

இதேபோல், 8 வயது சிறுவன் ரயான் (Ryan) என்பவர் 2019 ஆம் ஆண்டில் யூடியூப் (You tube) மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு யூடியூப்பில் தனக்கான பிரத்யேக சேனலை தொடங்கிய அவர், சிறுவர்களுக்கான பொம்மைகள் பற்றிய தகவல்களை கொடுத்து விரைவிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஃபோர்ப்ஸ் இதழ் அறிக்கையின்படி, 2018 ஜூன் முதல் 2019 ஜூன் வரை 26 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்தது. ரியானின் சேனலை அவனது பெற்றோர் நிர்வகித்து வருகின்றனர். ரியான் யூ டியூப் சேனலுடன் வால்மார்ட் (Wallmart) உள்ளிட்ட நிறுவனங்கள் விளம்பர ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: