தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் 62% பேர் லஞ்சம் கொடுத்தே சேவைகளை பெறுவதாக அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் 62% பேர் லஞ்சம் கொடுத்தே சேவைகளை பெறுவதாக அதிர்ச்சி தகவல்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில்  62 % பேர் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தே தேவையான சேவைகளை பெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

TRANSPARENCY INTERNATIONAL என்ற நிறுவனம் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஊழல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் மொத்தம் 1,90,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் ஊழல் அதிகமுள்ள மாநிலத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளது. லஞ்சம் குறைவாக உள்ள மாநிலமாக கேரளா இருக்கிறது.


தமிழகத்தில் 100-ல் 62 பேர் அரசு அலுவலகங்களில் தங்களது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 41 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்.

நகராட்சி நிர்வாக பணிகளில் காரியம் ஆவதற்காக 19 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக காவல்துறைக்கு 15 சதவிகிதம் லஞ்சம் அளிக்கப்படுகிறது.இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் தங்களது உரிமைகளான அரசு நலத்திட்டங்கள், ஓய்வூதியம் போன்றவற்றை பெற கூட லஞ்சம் தருவதுதான்.

மற்ற மாநிலங்களில் லஞ்சம் வாங்குவது குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவிகிதம் லஞ்சம் பெறுவோர் எண்ணிக்கை கூடியிருப்பது வேதனையின் உச்சம்.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை மேற்கொண்டால் இதுபோன்ற ஊழல்கள் தடுக்கப்படும் என்றாலும், அதற்கான நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளன.

Also see...
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading