Home /News /national /

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என பயந்து, தனது வீட்டில் வைத்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    கர்நாடகா மாநிலம் கோலாரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர், காவல்துறையினருக்குப் பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    கோலார், சித்ரகோட்டே கிராமத்தில் வசிக்கும் ஓர் தம்பதிக்கு, 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அந்த தம்பதி இருவரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் வீட்டிற்கு அருகில் திம்மப்பா என்ற 60வயது முதியவர் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் அந்த தம்பதி, தங்கள் மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றனர்.

    இந்நிலையில், திம்மப்பா சிறுமியின் வீட்டிற்குச் சென்று, சாக்லேட் தருவதாகக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கே அந்த சிறுமியை திம்மப்பா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், அந்த சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் சிறுமியை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டு திம்மப்பா பலாத்காரம் செய்ததை சிறுமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோலார் டவுன் காவல்நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதனை அறிந்த திம்மப்பா, தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என பயந்து, தனது வீட்டில் வைத்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே விசாரணைக்காக வந்த காவல்துறையினர் மயங்கிக் கிடந்த திம்மப்பாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    Must Read: பெண்ணைக் கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்துப் பரிமாறிய கொடுமை

     

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் காவல்துறையினருக்குப் பயந்து திம்மப்பா தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கோலார் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Child harassment, Karnataka, Sexual harasment

    அடுத்த செய்தி