திருப்பதி மலையில் தீயாய் பரவும் கொரோனா - ஊழியர்கள் 60 பேருக்கு தொற்று உறுதி

திருப்பதி மலையில்இதுவரை 60 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மலையில் தீயாய் பரவும் கொரோனா - ஊழியர்கள் 60 பேருக்கு தொற்று உறுதி
திருப்பதி கோவில் (கோப்புப்படம்)
  • Share this:
திருப்பதி மலையில் வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோர் உட்பட சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் திருப்பதி மலையில் வேலை செய்யும் தேவஸ்தான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவாக கொரோனா பரிசோதனை நடத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், திருப்பதி மலையில் பணியாற்றும் ஊழியர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி மலையில் ஊழியர்கள் தங்கியிருக்கும்போது இதுவரை ஹால்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து இருப்பதன் காரணமாக இனிமேல் திருப்பதி மலையில் பணியாற்றுவதற்காக வரும் ஊழியர்களை அறைக்கு இரண்டு பேர் என்று தங்க வைக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


மேலும் திருப்பதியில் உள்ள மாதவ நிலையம் விருந்தினர் மாளிகையை தொற்று காரணமாக பாதிக்கப்படும் தேவஸ்தான ஊழியர்களுக்கு தனிமை படுத்தும் முகமாக மாற்றியமைக்கவும், துணை நிர்வாக அதிகாரி தலைமையில் மாதவம் விருந்தினர் மாளிகையில் அனைத்து ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திருப்பதி மலை இடம்பெற்றுள்ள சித்தூர் மாவட்டத்தில் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் ஒட்டுமொத்தமாக வெளியிடப்படுகிறது.
இதனால் திருப்பதி மலையில் பணியாற்றும் ஊழியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெளிவாக தெரிவிப்பது கிடையாது.

Also read... அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

இதனால் திருப்பதி மலையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் ஊரில் வசிக்கும் பொதுமக்கள், திருப்பதி மலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர்கள் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்று தெரியாமல் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading