3 வயது தம்பியின் கண் முன்னே தாத்தாவால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 6 வயது சிறுமி!

மாதிரிப்படம்

6 வயது சிறுமி அவரின் தாய் வழி தாத்தாவால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  • Share this:
இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று அதிர்ச்சியடையும் அளவிற்கு இன்று நாட்டில் சிறார்கள் பாலியல் ரீதியில் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் சமூகத்தின் அவலத்தை தோலுரித்து காட்டிக்கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடக்கக் கூடிய சம்பவங்கள் அதிர்ச்சி ரகமாக அமைந்துவிடுகின்றன. அது போன்றதொரு சம்பவம் தான் இதுவும்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள கோலார் பகுதியைச் சேர்ந்த 6 வயதே ஆன சிறுமி அவருடைய தாய்வழி தாத்தா மற்றும் மற்றொரு நபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார், அதுவும் அவருடைய 3 வயது தம்பியின் கண் முன் இது நடந்திருக்கிறது.

கடந்த வியாழக்கிழமையன்று சிறுமியிடம் ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்த அவருடைய தாயார் என்ன நடந்தது என கேட்டிருக்கிறார். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வ ன்புணர்வு செய்ததாக சஞ்சய் என்ற நபரையும், சிறுமியின் தாய் வழி தாத்தாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்


கோலார் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகாந்த் பட்டேல் கூறுகையில், “6 வயது சிறுமியையும், அவருடைய 3 வயது தம்பியையும் சஞ்சய் என்ற நபர் அவருடைய வீட்டுக்கு கூட்டிச் சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாய் வழி தாத்தாவும் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமியின் தம்பியான 3 வயது குழந்தையும் அந்த நேரத்தில் அங்கு இருந்துள்ளது.

இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற தகவலை சிறுமியால் கூற இயலவில்லை, இருப்பினும் நடந்தவற்றை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அவரிடம் 20 ரூபாயை கொடுத்திருக்கிறார் அவரின் தாத்தா.

சிறுமியிடம் தங்களால் தகவல்களை கேட்டுப்பெற முடியாததால் உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் நடந்தவை குறித்து கேட்டறிந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேற்குவங்கத்திற்கு திருடனை தேடிச் சென்ற பீகார் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்!


சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக சஞ்சய் மற்றும் சிறுமியின் தாய்வழி தாத்தா ஆகிய இருவர் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: