• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எங்க நிலத்தையும் கொடுத்திட்டோம்.. குழந்தையை கொன்னுட்டானே - கதறும் 6 வயது சிறுமியின் பெற்றோர்

எங்க நிலத்தையும் கொடுத்திட்டோம்.. குழந்தையை கொன்னுட்டானே - கதறும் 6 வயது சிறுமியின் பெற்றோர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எங்க வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் என் மகளின் சடலத்தை கண்டுபிடித்தோம். அவளது ஒரு கண்கள் வெளியில் வந்த நிலையில் இருந்தது.

  • Share this:
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை  தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டுள்ளார். சிறுமியை காணாமல் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தேடிய நிலையில் அவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த குளத்துக்கு அருகில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Also Read: டிக்டாக்கில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் கும்பல்... வங்கதேச இளம்பெண் வீடியோ விவகாரத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

    அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் குற்றவாளி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர், மற்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறுமியின் தந்தை, “ அந்த நபரின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. உள்ளூர் மக்கள் அந்த நபரை பார்த்தாலே பயப்படுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்களுக்குள் நிலத்தகராறு ஏற்பட்டது. ஆனால் பயத்தின் காரணமாக எங்களின் நிலத்தை அந்த நபருக்கே விட்டுக்கொடுத்தோம். எங்கள் மகள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தால். இயற்கை உபாதைகளை கழிக்க வெளியில் செல்லும் போது அவள் கடத்தப்பட்டுள்ளார். என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

    எங்க வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் என் மகளின் சடலத்தை கண்டுபிடித்தோம். அவளது ஒரு கண்கள் வெளியில் வந்த நிலையில் இருந்தது. கழுத்தில் காயங்கள் இருந்தது. அந்த நபரை தூக்கிலிடுங்கள் என் மகளுக்கு நியாயம் வழங்குங்கள்” என கண்ணீர் வடித்தார்.

    Also Read: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம் - பாலியல் பலாத்கார பிரிவில் வழக்குப்பதிவு

    இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள பாரபங்கி காவல்துறை கண்காணிப்பாளர் யமுனா பிரசாத், ‘குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாலை 3 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.

    கொலை செய்யப்பட்ட குழந்தைக்கு 6 வயது இருக்கும். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் இடது கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் கூறவதுபோல் கண்கள் எல்லாம் வெளியில் வரவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து புகார் பெற்றுள்ளோம். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும். சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: