6 மாணவர்கள், ஆசிரியருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு... உடனடி நடவடிக்கையில் கேரள அரசு

VMHM மேல்நிலைப் பள்ளியில் 206 பேருக்கு மர்ம காய்ச்சல் தாக்கியதாக முதலில் புகார் வந்துள்ளது.

6 மாணவர்கள், ஆசிரியருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு... உடனடி நடவடிக்கையில் கேரள அரசு
H1n1
  • News18
  • Last Updated: January 9, 2020, 6:47 PM IST
  • Share this:
கேரளாவில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேருக்கு H1N1 என்னும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சுகாதாரத் துறை மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட ஆசிரியர் ஒருவருக்கும் H1N1 பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட அதிகாரி அளித்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள VMHM மேல்நிலைப் பள்ளியில் 206 பேருக்கு மர்ம காய்ச்சல் தாக்கியதாக முதலில் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பள்ளியில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காய்ச்சல் இருப்போரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.


ரத்தப் பரிசோதனையில் அப்பள்ளியைச் சேர்ந்த 7 பேருக்கு H1N1 தாக்குதல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க: விவாகரத்து அழைப்பிதழ்- பந்தாவான இந்தியத் திருமணங்களை கலாய்க்கும் ஓவியர்...!


செய்திகளை உடனுக்குடன் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப்இன்ஸ்டாகிராம், ஹெலோ, ஷேர்சாட், டிக்டாக் சமூக வலைதளங்களிலும் காணலாம்
 
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்