முகப்பு /செய்தி /இந்தியா / நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் மறுசீராய்வு மனு தாக்கல்..

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் மறுசீராய்வு மனு தாக்கல்..

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் 13-ம் தேதியும், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும் நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா அடுத்த ஆண்டும் தொடர்ந்தால், மாணவர்கள் மீண்டும் ஒரு ஆண்டு காத்திருக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், நீட், ஜேஇஇ தேர்வு நடத்துவது தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால், முதலமைச்சர் நாராயணசாமி தரப்பில் இருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Neet Exam