6.2 Earthquake in Assam | அசாமில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவு; வடகிழக்கு, வடக்கு வங்கமும் குலுங்கியது

முதற்கட்டமாக வெளியான அசாம் நிலநடுக்கப் படங்கள்.

இன்று காலை அசாம் மாநிலத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு கோலில் இந்த பூகம்பம் 6.2 என்று பதிவாகியுள்ளது.

  • Share this:
    இன்று காலை அசாம் மாநிலத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு கோலில் இந்த பூகம்பம் 6.2 என்று பதிவாகியுள்ளது.

    இந்தத் தகவலை ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

    அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, “சற்று முன் பெரிய பூகம்பத்தை உணர்ந்தோம். விவரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் தேஜ்பூரிலிருந்து 43 கிமீ தொலைவில் மேற்கே இருந்ததாக தேசிய நில்நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7:51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது, ஆனால் 10 கிமீ ஆழம் என்கிறது தேசிய நிலநடுக்க மையம்.

    நிலநடுக்கம் அசாம், வடக்கு வங்கம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.



    ஒரு தகவல் பூகம்பம் ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவாகியிருப்பதாக தகவல் வெளியிட, இந்திய நிலநடுக்க மையம் 6.4 என்று பதிவானதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த ரிக்டர் அளவு அசாம் சோனிட்பூரிலிருந்து பதிவானதாக சில தகவல்கள் கூறினாலும் இன்னும் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

    பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     

     



     

    தற்போது வரும் செய்திகளின் படி பின்னதிர்வுகளும் அசாமில் ஏற்பட்டுள்ளன. சிக்கிமில் தலைநகர் காங்டாக்கில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.4 என்று பதிவானது. இப்போது அசாமில் ஏற்பட்டுள்ளது, இந்த இரண்டுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுதொடர்பான தகவல்கள் இன்னும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேதங்கள், உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை.
    Published by:Muthukumar
    First published: