ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை: 12 நாட்களில இத்தனை லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் பண்ணிருக்காங்களா?

சபரிமலை: 12 நாட்களில இத்தனை லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் பண்ணிருக்காங்களா?

சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

Sabarimalai ayyapan temple | கார்த்திகை முதல் நாளே பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pathanamthitta | Kerala

சபரிமலையில் நடைதிறக்கப்பட்டு 12  நாள் ஆகும் நிலையில், இதுவரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.

கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

நடை திறக்கப்பட்டு 12 வது நாளாகிய நிலையில், சபரிமலையில் இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.

இன்று 63 ஆயிரத்தி 130 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

நேற்று 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க | பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வரக்கூடாது : சபரிமலையில் புதிய கட்டுப்பாடு

அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இன்று காலை 9 மணி வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இம்மாதம் இறுதி வரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 905 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்திருக்கின்றன.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala Ayyappan, Sabarimalai, Sabarimalai Ayyappan temple