சத்தீஸ்கரில் பயங்கரம்... 5 பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர்...!

சத்தீஸ்கரில் பயங்கரம்... 5 பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர்...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 12:19 PM IST
  • Share this:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் இன்று வீரர் ஒருவர் சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது. இந்த முகாமில் இன்று வீரர்களிடையே நடந்த பயங்கர மோதலில் 5 படைவீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

வீரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தனது சக வீரர்களை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.


காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தார்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...