Home /News /national /

காஷ்மீர் : பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 39 பேர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி

காஷ்மீர் : பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 39 பேர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி

விபத்தில் கவிந்த பேருந்து.

விபத்தில் கவிந்த பேருந்து.

இந்த சோகமான சம்பவத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் 37 இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் மற்றும் 2 காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிந்தது. இதில் 6 வீரர்கள் இறந்துள்ளனர். மேலும் இதர காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



    ஜம்மு & காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் சந்தன்வாரி மற்றும் பஹல்காம் இடையிலான ஆழமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் 37 இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் மற்றும் 2 காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதில் சம்பவ இடத்திலேயே 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில் மொத்தம் 6 பேர் பலியானதாகத் தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த இதர வீரர்களை மீட்டு ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தைக் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று டிவிட்டரில் காஷ்மீர் மண்டல காவல்துறை குறிப்பிட்டுள்ளது.



    இந்த சோகமான சம்பவத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த துயரமான சம்பவத்தில் பலியான விலைமதிப்பற்ற வீரர்களின் இழப்பு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Army men, Indo-Tibetan Border Police, Jammu and Kashmir

    அடுத்த செய்தி