ஹோம் /நியூஸ் /இந்தியா /

வலிமை பட பாணியில் செயின் பறிப்பு.. 20 நிமிட இடைவெளியில் 6 சம்பவங்கள்..!

வலிமை பட பாணியில் செயின் பறிப்பு.. 20 நிமிட இடைவெளியில் 6 சம்பவங்கள்..!

செயின் பறிப்பு சிசிடிவி

செயின் பறிப்பு சிசிடிவி

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், 16 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில், இன்று காலை பல்வேறு இடங்களில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. ஐதராபாத்தின் ராஜேந்திரா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த கொள்ளையர்கள் சங்கிலியை பறித்துச் சென்றனர். அந்த இடத்தில் இருந்து செகந்திராபாத் வரை பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து 10 முதல் 20 நிமிட இடைவெளியில் 6 செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

திருட்டு நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், 16 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஒரே கும்பல் தான் பல இடங்களிலும் கைவரிசை காட்டியதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

..

First published:

Tags: Chain Snatching, Police investigation, Telangana