Home /News /national /

பிரபலமான கல்வி நிலையங்களின் சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை.. டெல்லியில் 6 பேர் கைது

பிரபலமான கல்வி நிலையங்களின் சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை.. டெல்லியில் 6 பேர் கைது

போலி கல்வி சான்றிதழ்

போலி கல்வி சான்றிதழ்

ஒருவருக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு போலியான கல்வி பட்டப்படிப்பு சான்றுதலழ், மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை உருவாக்கி அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பல்கலைக்கழக கல்வி சான்றிதழைப் போலியாகத் தயார் செய்து கொடுத்து பணம் வசூலித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

    டெல்லி சன் லைட் காலனியின் கிலோக்கரி என்ற பகுதியில் கல்வி மையம் என்ற பெயரில் போலி சான்றிதழ் வழங்கும் மையம் செயல்பட்டு வருவதாக காவல்துறை சைபர் கிரைம் - க்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் அந்த மையம் போலியானது என்று கண்டறிந்தனர்.

    அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த மூன்று இளம் பெண்களைக் கைதுசெய்துள்ளனர். மேலும் மையத்தின் உரிமையாளரான ரஹீன் மற்றும் கைஃப் என்ற 2 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 தொலைப்பேசிகள், கணினி, பிரிண்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட போலி சான்றிதழ்கள் போன்றவற்றைக் கையகப்படுத்தினர்.

    Also Read : நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன்.. சாமியார் சொன்ன சடங்கு - புனேவில் அதிர்ச்சி சம்பவம்

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இணையத்திலிருந்து மாணவர்களின் தகவல்களை தெரிந்துகொண்டு அவர்களிடம் இருந்து  தலா 1000 முதல் 2000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு போலியான கல்வி பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை உருவாக்கி அளித்துள்ளனர். மேலும் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி என்ற பெயரில் போலி ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கைதானவர்கள் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உருவாக்கிய சான்றிதழ்கள் ஏதுவுமே குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் பதிவாகவில்லை என்பதால் இவர்களிடம் இருந்து சான்றிதழ்களை வாங்கிய நபர்களைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Delhi, Education, Fake certificate

    அடுத்த செய்தி