Home /News /national /

இந்தியா 5ஜி வெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - முகேஷ் அம்பானி

இந்தியா 5ஜி வெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியா 2ஜியிலிருந்து 4ஜிக்கும் பின்னர் 5ஜிக்கு இடம்பெயர்வதை விரைவில் முடிக்க வேண்டும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.

    நாடு முழுவதும் தகவல் தொடர்பு இணைப்பை மேம்படுத்த இந்தியா 5G வெளியீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்,டும் என ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    ‘இந்திய மொபைல் காங்கிரஸ் 2021’ என்ற மாநாட்டில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, ‘அடுத்த பத்தாண்டுகளுக்கான தகவல் தொடர்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, 5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடுவது இந்தியாவின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் 5G புரட்சிக்கு தொழில்துறை தயாராகி வரும் வேளையில், 2G நெட்வொர்க்குகளில் இருந்து 4G க்கு விரைவாக இந்தியர்கள் இடம்பெயர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

    முகேஷ் அம்பானி பேசியதாவது, “இந்தியா 2G இலிருந்து 4Gக்கும் பின்னர் அதிலிருந்து 5Gக்கும் இடம்பெயர்வதை விரைவில் முடிக்க வேண்டும். சமூக-பொருளாதார பிரமிட்டின் அடிமட்டத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களை 2ஜியில் அடைத்து வைத்திருப்பது டிஜிட்டல் புரட்சியின் பலன்களைப் பறிப்பதாகும்.

    Also read:  அரபு நாடுகளுக்கான விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் சாதித்த இந்தியா

    ஜியோவை பொருத்தவரையில் 4G மற்றும் 5G செயல்படுத்தல் மற்றும் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருகிறோம். 5ஜியை பொருத்தவரையில் முழுமையாக கிளவுட் முறையிலும் மற்றும் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கப்படும் வகையிலும், 100% உள்நாட்டு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம். ஜியோவின் நெட்வொர்க்கை விரைவாகவும் தடையின்றியும் 4ஜியில் இருந்து 5ஜிக்கு மேம்படுத்தலாம்.

    அதே நேரத்தில் இந்திய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு 5ஜி சேவைகள், சாதனங்கள் அணுக கூடிய வகையில் மலிவான கட்டணங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    5G இணைப்புடன், ஃபைபர் இணைப்பு இந்தியா முழுவதும் "ஒரு இலக்கு நிர்ணயித்து முடிக்கப்பட வேண்டும்" என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Jio, Mukesh ambani, Reliance

    அடுத்த செய்தி