பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விமானசேவைகள்.. 59,000 பயணிகள் பாதிப்பு..

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தனியார் விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவைகளை ரத்து செய்ததால் 59,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விமானசேவைகள்.. 59,000 பயணிகள் பாதிப்பு..
கோப்புப் படம்
  • Share this:
விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தனியார் விமானங்கள், தங்கள் உள்நாட்டு விமான சேவைகளை ஜூன் முதல் செப்டம்பர் வரை, குறைந்த அளவிலான பயணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மழை, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ரத்தான உள்நாட்டு சேவை அளிக்கும் தனியார் விமானங்களின் விகிதம் 1 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த விகிதம் 4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க... நடக்காமல்போன திருமணத்துக்கு வசூல்? ஜி.எஸ்.டி. வரிகேட்கும் வடபழனி கோவில் நிர்வாகத்தின் திருமண மண்டபம்..


கொரோனா ஊரடங்கில் கடந்த மே மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான சேவையில், போதிய பயணிகள் இல்லாமல் ஜூன் மாதத்தில் 3.8 விழுக்காடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இந்த விகிதம் கடந்த செப்டம்பரில் ஓரளவுக்கு சீரடைந்து 2.6 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதேபோல் கடந்த செப்டம்பரில் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 63 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading