மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 58,952 பேருக்கு கொரோனா.. 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது..

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 58,952 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினம் 60,212 ஆக பாதிப்பு பதிவான நிலையில் நேற்று சற்றே குறைந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநில அரசு அறிவித்த மக்கள் ஊரடங்கு, நேற்று இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது.

  இந்த ஊரடங்கின் போது உரிய காரணம் இன்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, மருந்துக்கடை போன்ற அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் மற்ற அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்த 2 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரவு நேரத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஒன்றாம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க... கோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...

  இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் 6,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாளை முதல் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: