Home /News /national /

PM CARES நிதி மூலம் 551 ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும் - பிரதமர் அலுவலகம்

PM CARES நிதி மூலம் 551 ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும் - பிரதமர் அலுவலகம்

ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள்

ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள்

கடந்த ஜனவரி மாதத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக 201.58 கோடி ரூபாய்க்கு PM CARES நிதியம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து பல மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் பிராண வாயு கிடைப்பதை அதிகரிப்பதற்காக 551 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பிஎஸ்ஏ) மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

PM CARES நிதியம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவுவதற்கான ஒப்புதலை அளித்துள்ளதாக இன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும் எனவும் இந்த ஆலைகளை மத்திய சுகாதார அமைச்சகம் கொள்முதல் செய்து வழங்கும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக 201.58 கோடி ரூபாய்க்கு PM CARES  நிதியம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகளை நிறுவுவதன் நோக்கம் அந்த மாவட்டத்தின் ஆக்ஸிஜன் தேவையை அந்த மாவட்டத்திலேயே பூர்த்தி செய்து கொள்வதாகும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவிர தொற்றுக்காக சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும்.



இந்த இக்கட்டான தருவாயில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் மிகப் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என 551 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவும் முடிவினை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Corona, Covid-19, COVID-19 Second Wave, Oxygen

அடுத்த செய்தி