பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 55 வயதுடைய நசீம் குரேஷி, ஜோகியா கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் அவர் மாட்டிறைச்சி வைத்துள்ளார் என்று சந்தேகித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அது தாக்குதலாக மாறி அவரை அடித்து உதைத்துள்ளனர். அதில் படுகாயங்கள் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹசன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் அவருடைய உறவினரான ஃபிரோஸ் அகமது குரேஷி என்பவருடன் ஜோகியாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மசூதி அருகே ஒரு கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி மாட்டிறைச்சி உள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இருந்து ஃபிரோஸ் தப்பிய நிலையில் நசீம் குரேஷி-வை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய இரண்டு பேரை தேடிவருகினறனர்.
கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜே எஸ் கங்வார் தெரிவிக்கையில், இறந்தவர் காரில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதா என்ற விவரங்களும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார். மேலும், இறந்தவரின் உறவினர் அளித்த தகவலில் படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beef, Bihar, Man killed