ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் வெப்ப காற்று காரணமாக மரணங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வெப்ப காற்று காரணமாக மரணங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் வெப்பக்காற்று பாதிப்பு காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லான்செட் (The Lancet)  நாளேடு சர்வதேச அளவில் முன்னணி ஆய்வுகளை நடத்தி விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. இந்த நாளேடு தற்போது புவி கால நிலை மாற்றம் அதனால் உலக சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சர்வதேச அளவில் வெப்பக்காற்று பிரச்னை கடந்த 20 ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது.

  லென்செட் ஆய்வின்படி, 2000-2004 காலகட்டம் தொடங்கி 2017-21 காலகட்டம் வரையில் இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் வெப்பக்காற்று பாதிப்பு காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த வெப்ப காற்று சார்ந்த பாதிப்புக்கு 65 வயதுக்கு அதிகமானோரும், ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளும் தான் அதிக அளவில் ஆளாகிறார்கள். 2020ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 3.30 லட்சம் பேர் இந்தியாவில் புதைபடிமம் எரிபொருள் எரிப்பு தாக்கம் காரணமாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

  அதேபோல், 2021ஆம் ஆண்டில் வெப்ப பாதிப்பு காரணமாக மக்களின் வேலை செய்யும் நேரம் குறித்து நாட்டின் ஜிடிபியில் 5.4 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இயல்பை விட 30 மடங்கு வெப்ப காற்று வீச்சு பாதிப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு காரணம்.உலக அளவில் இந்த வெப்ப காற்று பிரச்னை காரணமாக 9.8 கோடி மக்கள் உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்துள்ளனர்.

  இதையும் படிங்க: 52 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு.. வயிற்றில் இருந்து உடல் மீட்பு!

  உலகில் வெப்பமானது சராசரியாக 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது மனிதர்களின் உடல் மற்றும் மன நலனை வெகுவாக பாதித்துள்ளது. உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2100ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பமானது 2.4 - 3.5 டிகிரி உயர்ந்து விடும். இதை தடுக்க சர்வதேச சமூகங்கள் இணைந்து ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Climate change, Death, Heat Wave