முகப்பு /செய்தி /இந்தியா / 55 எச்.டி கேமராக்கள், ட்ரோன் மூலம் மோடியின் காசி நிகழ்ச்சி படம் பிடிப்பு

55 எச்.டி கேமராக்கள், ட்ரோன் மூலம் மோடியின் காசி நிகழ்ச்சி படம் பிடிப்பு

ரூ.339 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.

ரூ.339 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.

ரூ.339 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காசி விஸ்வநாதர் கோவிலை கூடுதல் வசதிகளுடன் 339 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அவர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி 55 எச்.டி (High definition) மற்றும் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை கையாளுவதற்காக 4 ஜிம்மி ஜிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனை சேர்ந்த சுமார் 100 பணியாளர்கள், மோடியின் காசி நிகழ்ச்சியை கவரேஜ் செய்துள்ளனர். அவர்களில் 55 பேர் கேமரா மேன்கள்.

இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், '55 எச்.டி. கேமராக்கள், பதிவுகளை அப்லிங்க் செய்யும் 7 சாட்டிலைட் வேன்கள், 4 செல்லுலர் மொபைல் நியூஸ் யூனிட்டுகள், ரேடியோ அலைவரிசை கேமரா (R.F.)4 ஜிம்மி ஜிப்ஸ், மிட் - ஏர் ட்ரோன் ஆகியவை மோடியின் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டன. உண்மையிலேயே இது பிரமாண்டமான கவரேஜ். கேதார்நாத்துக்கு மோடி சென்ற நிகழ்ச்சியும் தூர்தர்ஷனில் கவரேஜ் செய்யப்பட்டது. அதை விட காசி நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இந்துவாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்க நினைக்கும் கோவில்களுள் ஒன்றான இது ஒரு முக்தி தலமாகும். மோட்சம் தரும் ஏழு தலங்களுள் காசியும் ஒன்றாகும்.

பல்வேறு சிறப்புகளைக்கொண்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்று. மற்ற தலங்களில் இல்லாத வகையில் சிவபெருமான் இங்கு மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், 'ஆனந்த பவனம்' என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்கள்.

சுமார் 23,000 கோயில்களைக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி காசியில், விஸ்வநாதர் ஆலயம் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த ஆலயத்தை சென்றடைய குறுகிய தெருக்களையும், கடைவீதிகளையும் கடந்து செல்வது சிரமத்துக்குரியதாக இருந்தது.

மேலும் ஆலய வளாகம் 3,000 சதுர அடியில் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் நெருக்கடி அதிகமானதாக இருந்து வந்தது. இந்த ஆலய வளாகத்தை பல்வேறு சிறப்புக்களுடன், விரிவாக்க திட்டமிடப்பட்டது. வாரனாசி தொகுதியின் எம்.பியான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

'

600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்புக்கு ஆலய வளாக விரிவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. கங்கை படித்துரை வழியாக நேரடியாக ஆலயத்திற்கு வரும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் உள்ளிட்டமேம்பாட்டுப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டள்ளன.

இந்நிலையில் முதற்கட்ட பணிகள் 339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முதலில் காலபைரவர் கோவிலில் பிரதமர் வழிபட்டார். பின்னர் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து ஆரத்தி காட்டி வழிபட்டார். இன்றிரவு கங்கை படித்துரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.

Also read: காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறப்பு.. தன் கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடி

First published:

Tags: PM Modi