Home /News /national /

அணைகள் சீரமைப்பு திட்டம்: ரூ. 3,466 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

அணைகள் சீரமைப்பு திட்டம்: ரூ. 3,466 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

கபினி அணை (கோப்புப் படம்)

கபினி அணை (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
    தென் மாநிலங்களில் உள்ள அணைகளின் சீரமைப்பிற்கு ரூ.1898 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு  கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில், நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.3,466 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    அதில், தென் மாநிலங்களுக்கு மட்டும் 1, 898 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறுப்பில் உள்ள 89 அணைகளுக்கு  803 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன.  இதுபோல், கேரளாவில் உள்ள 16 அணைகளுக்கு 360 கோடி ரூபாயும், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு, 735 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏழு மாநிலங்களுக்கான 3, 466 கோடியில், உலக வங்கி 2,628 கோடியையும், இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள் 747 கோடி ரூபாயையும் செலவிடும். எஞ்சிய 91 கோடி ரூபாயை, மத்திய நீர்வள ஆணையம் வழங்கும். இப்பணிகள், 2020-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, Dams improvement project, Modi Cabinet

    அடுத்த செய்தி