கண்ணீர் மல்க 130 வயது முதலைக்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்!

எங்கள் கிராமத்தை பாதுகாத்து வந்ததால் இந்த குளத்தின் கரையில் முதலைக்கு நினைவு மண்டபம் கட்ட உள்ளோம் என்று ஊர்த் தலைவர் தெரிவித்துள்ளார்.

news18
Updated: January 11, 2019, 9:21 AM IST
கண்ணீர் மல்க 130 வயது முதலைக்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்!
முதலை கங்காராம் (Image: HT Photo)
news18
Updated: January 11, 2019, 9:21 AM IST
முதலை என்ற உடன் மனதில் ஒரு திகில் கலந்த பயம் தோன்றும் நிலையில், சத்தீஸ்கரில் ஒரு கிராமமே சேர்ந்து 130 வயதான முதலைக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பெமிதாரா மாவட்டத்தில் உள்ளது பவா மோஹ்தாரா என்ற கிராமம். இங்குள்ள குளம் ஒன்றில் முதலை ஒன்று நீண்ட காலமாக வசித்து வந்துள்ளது. வனத்துறையினர் மதிப்பீட்டின் படி அந்த முதலைக்கு 130 வயது இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கங்காராம் என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட இந்த முதலை ஒரு ‘சைவ முதலை’ என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். ஊர் மக்கள் அளிக்கும் அரிசி சாதம் மற்றும் பருப்பை தான் இந்த முதலை சாப்பிடுகிறது.

250 கிலோ எடையும், 3.4 மீட்டர் நீளமும் உள்ள முதலை, குளத்தை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகளை எதுவும் செய்தது கிடையாது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வயது மூப்பு காரணமாக அந்த முதலை இறந்து நீரில் மிதந்தது. வனத்துறையினர் வந்து அதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதை கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

தமிழ் ராக்கர்ஸில் விஸ்வாசம் ரிலீஸ்... அஜித் ரசிகர்களுக்கு ஐடியா கொடுத்த படக்குழு

அதை பெற்றுக் கொண்ட கிராம மக்கள், முதலையின் சடலத்துக்கு மலர்தூவி இறுதி மரியாதை ெசய்தனர். பின்னர், உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக கிராமத் தலைவர் மோகன் சாஹூ கூறுகையில், “முதலை கங்காராமிடம் கிராம மக்கள் மிக அன்பு செலுத்தி வந்தனர். அந்த குளத்தில் குளிக்கும் யாருக்கும் அந்த முதலை எந்த தீங்கும் செய்ததில்லை. எனது தாத்தா சிறுவனாக இருந்தபோதே அந்த குளத்தில் இந்த முதலை வசித்து வந்ததாக கூறியுள்ளார். 2 முறை அந்த முதலை பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டது.
Loading...
குழந்தைகள் குளத்தில் குளித்தால் கூட முதலை எதுவும் செய்யாது. வேறு இடத்துக்கு நகர்ந்து விடும். ஆனால், கிராம மக்கள் அதை மீண்டும் இந்த குளத்திற்கு கொண்டு வந்து விட்டனர். முதலை இறந்தது, எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போன்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிராமத்தை பாதுகாத்து வந்ததால் இந்த குளத்தின் கரையில் முதலைக்கு நினைவு மண்டபம் கட்ட உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Also See..

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...