ஹோம் /நியூஸ் /இந்தியா /

உஷார்.! சளி, காய்ச்சல் மருந்துகளில் 50 போலிகள்.. இதுதான் முழு லிஸ்ட்!

உஷார்.! சளி, காய்ச்சல் மருந்துகளில் 50 போலிகள்.. இதுதான் முழு லிஸ்ட்!

 50 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

50 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

மாதம் தோறும் குறிப்பிட்ட அளவிலான மருந்துகள், அழகு சாதன பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் தரத்தை சோதித்து அறிக்கை வெளியிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் கண்டறிய அரசால் நடத்தப்பட்ட சோதனையில், வலி,காய்ச்சல், சளிக்கான மருந்துகள் தரமின்றி தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

நாட்டில் நோய்கள் அதிகரிக்கும் அதே நேரம் அதற்கான மருந்துகளின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. புதிய புதிய மருந்து நிறுவனங்களும் உருவாகிறது. குறைந்த விலையில் மருந்து தர வேண்டும் என்ற மார்க்கெட் ஸ்ட்ராட்டஜியை கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் பல நிறுவனங்கள் மருந்தின் தரத்தில் கோட்டை விடுகின்றன.

இதனால் மருத்துவ சந்தையில் தரமற்ற மருந்துகள் உலவி வருகிறது. இநோய்களை தீர்க்க எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் புதிய நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இதை தடுக்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மும்முரமாக செயல்பட தொடங்கின.

நாடு முழுதும் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து, மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், சமீபத்தில், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு நடத்தத் தொடங்கியது. மாதம் தோறும் குறிப்பிட்ட அளவிலான மருந்துகள், அழகு சாதன பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் தரத்தை சோதித்து அறிக்கை வெளியிடுகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் தயாரித்த இந்த 4 இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி.. ஹரியானா அரசுக்கு மத்திய அரசு அலெர்ட்!

கடந்த மாதம் நடந்த ஆய்வில் சுமார் 1280 மருந்துகள் தர ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை, கொல்கத்தா, கௌஹாத்தி, சண்டிகர் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டதாகும்.

காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. இதையடுத்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில், அந்த போலி மருந்துகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

https://cdsco.gov.in/opencms/opencms/system/modules/CDSCO.WEB/elements/download_file_division.jsp?num_id=OTE4Nw==

மேலும், போலி மற்றும் தரமற்ற மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வாரியங்கள் திட்டமிட்டு உள்ளன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Medicine