ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத மாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து பட்டியலினத்தவர் 50 பேர் பவுத்த மதத்துக்கு மாறினர்

மத மாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து பட்டியலினத்தவர் 50 பேர் பவுத்த மதத்துக்கு மாறினர்

ஹசன் நித்தூர் கிராமத்தில் பவுத்த வழிபாடு.

ஹசன் நித்தூர் கிராமத்தில் பவுத்த வழிபாடு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகாவில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து பட்டியலினத்தை சேர்ந்த 50 இளைஞர்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.

ஹாசன் மாவட்டம் நிட்டூரை சேர்ந்த 50 பட்டியலின‌ இளைஞர்கள், மசோதாவை கண்டித்து இந்து மதத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறினர். கர்நாடகாவில் மதமாற்றத்தை தடுக்க கடந்த வாரம் மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அரசு நிறை வேற்றியது.

இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய குடியரசுக் கட்சிஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கிறிஸ்துவம், முஸ்லிம் மத அமைப்பினரும், இடதுசாரி தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பவுத்த மதமாற்றம் குறித்து அம்பேத்கரிய இயக்க செயற்பாட்டாளர் சுவாமி நிட்டூர் கூறுகையில், “அம்பேத்கர் 1956-ம் ஆண்டு பவுத்தத்தை தழுவினார். நாங்கள் இந்துக்களாக இருந்த போது தீண்டாமை கடைபிடித்து, கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர். நாங் கள் இப்போது சுதந்திரமாக உணர்கிறோம். எங்களை பின்பற்றி ஆண்டுதோறும் அம்பேத்கரின்பிறந்த நாளான ஏப்ரல் 14-ம்தேதி நிறைய பேர் பவுத்தத்துக்கு திரும்புகின்றனர். எங்கள் செயல்பாட்டால் கோபமடைந் துள்ள பாஜக, மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.அரசியலமைப்புச் சட்டம், விரும்பிய மதத்தைத் தேர்ந் தெடுக்க சுதந்திரம் அளித்துள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது.” என்றார்.

சமீப ஆண்டுகளாக ஹாசன் மாவட்டத்தில் பல தலித் குடும்பங்கள் பவுத்த மதத்தைத் தழுவியுள்ளன. சுவாமி நிட்டூர்தான் முதன் முதலாக பவுத்தத்துக்கு மாறினார். இந்த மாவட்டத்தில் பவுத்தத்திற்கு மாறிய தலித்துக்கள் புத்த பூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவதோடு புத்த விகாரில் அடிக்கடி வழிபாட்டையும் நடத்தி வருகின்றனர்.

மசோதா போடுவதை விட மாநில அரசு தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுவாமி நிட்டூர்.

Also Read: செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்.. செல்போனை தட்டிவிட்டு திட்டித்தீர்த்த டி.கே.சிவக்குமார்..

கர்நாடக தலித் சங்கர்ஷ சமிதி தலைவர் மவாலி சங்கர், மதமாற்றத் தடைச்சட்டம் பற்றி கூறுகையில், “எரியும் பிரச்சனைகளை திசைத்திருப்ப இந்த மதமாற்றத் தடைச்சட்டத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. சட்டமே தேவையில்லை, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக அரசியல் சட்டத்துலேயே இடமுள்ளது. மேலும் நம் அரசியல் சாசனம் ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது” என்றார்.

First published:

Tags: Buddhism, Dalit, Karnataka