Home /News /national /

ராணுவத்தின் புதிய நியமன கொள்கை.. 50% சதவீத ராணுவ வீரர்கள் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறக் கூடும்

ராணுவத்தின் புதிய நியமன கொள்கை.. 50% சதவீத ராணுவ வீரர்கள் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறக் கூடும்

indian soldiers

indian soldiers

Indian Army | ராணுவத்தில் உள்ள பயிற்சி கட்டமைப்புகளை வைத்து, பணியில் சேருபவர்களில் ஒரே சமயத்தில் 40,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஆண்டுதோறும் ஏற்படும் 60,000 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
ராணுவத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையை சரி செய்யும் வகையிலும், ராணுவத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு புதிய பணி நியமனக் கொள்கை முன்மொழியப்பட்டது. இந்நிலையில், வீரர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யும் வகையில் இந்தக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியதால் 2 ஆண்டுகளாக ராணுவத்திற்கான பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில், பணி நியமன தாமதத்தை கண்டித்தும், உடனடியாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்க வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ‘டூர் ஆப் டூட்டி’ (Tour of Duty) என்ற பெயரில் நியமனக் கொள்கை முன்னெடுக்கப்படுவதாக அரசு வட்டாரத்தில் நெருக்கமாக இருப்பவர்கள் நியூஸ் 18 ஊடகத்திடம் தெரிவித்தனர். இந்தக் கொள்கை தொடர்பாக கடந்த 2 வாரங்களாக அரசு தரப்பில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றும், கொள்கை விதிகளில் சிறிய அளவில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டூர் ஆப் டூட்டி கொள்கை என்றால் என்ன?

டூர் ஆப் டூட்டி கொள்கை குறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “இந்தக் கொள்கையின் கீழ் பணி நியமனம் செய்யப்படும் 25 சதவீத வீரர்கள் 3 ஆண்டுகள் பணி செய்வார்கள். மேலும் 25 சதவீத வீரர்கள் 5 ஆண்டுகளுக்கு பணி செய்வார்கள், எஞ்சியுள்ள 50 சதவீத வீரர்கள் தங்களின் ஓய்வு காலம் வரையிலும் பணியில் நீடிப்பார்கள்’’ என்று தெரிவித்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் ஓய்வூதிய நிலுவைத் தொகை பிரச்சினைக்கு தீர்வு தருவதாக இந்தக் கொள்கை அமையும் என்று அரசுத் தரப்பில் நெருக்கமாக உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான மருத்துவப் பலன்கள் தொடரும் :

ராணுவ வீரர்களில் 50 சதவீதம் பேர் 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளில் பணி நிறைவு பெற்றாலும் கூட, இதர ஆயுதப் படை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அதே மருத்துவப் பலன்கள் இவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Also Read : இஸ்லாமிய பெண்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்குப் பதிவு

பயிற்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமாகிறது:

ராணுவத்தில் உள்ள பயிற்சி கட்டமைப்புகளை வைத்து, பணியில் சேருபவர்களில் ஒரே சமயத்தில் 40,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஆண்டுதோறும் ஏற்படும் 60,000 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

Also Read : யானையிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற போராடிய தந்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

பொதுவாக கடைநிலை வீரர்களுக்கு 34 வாரங்களும், டிரேட்ஸ்மேன் வீரர்களுக்கு 19 வாரங்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ராணுவத்திற்கான பணி நியமன நடவடிக்கைகளை உடனடியாக அதிகரித்தாலும் ஒட்டுமொத்த காலிப் பணியிடங்களை நிரப்ப 6 முதல் 7 ஆண்டுகள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: India, Indian army

அடுத்த செய்தி