பணமதிப்பிழப்புக்குப் பின் 50 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

குறிப்பாக 20 முதல் 24 வரையிலான இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

பணமதிப்பிழப்புக்குப் பின் 50 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
(News18 creative by Mir Suhail)
  • News18
  • Last Updated: April 17, 2019, 4:33 PM IST
  • Share this:
2000 மற்றும் 2010-ம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு வேலைவாய்ப்பின்மை அதிகப்பட்சமாக 6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது.

ஆனால், 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் இது கடுமையாக உயர்ந்து பலரும் வேலை இன்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. ’வொர்க்கிங் இந்தியா 2019’ என்ற ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் சக்தி, பலம் என்றெல்லாம் கருதப்படும் இளைஞர்கள் குறிப்பாக 20 முதல் 24 வரையிலான இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.


ஆண்கள் நிலையைவிட பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் தவிக்கின்றனர் என்கிறது ஆய்வு. தொழிலாளர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்திய தொழிலாளர் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கரூர் தேர்தல் அதிகாரி மீது டெல்லியில் காங்கிரஸ் தலைமை புகார்!தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading