இன்றைய கால கட்டத்தில் மனித இனத்திற்கு மாபெரும் சவாலாக இருப்பது கொரோனா பெருந்தொற்று தான். சாதாரண நோய்களை போன்று இல்லாமல் இது பல மடங்கு பெருக கூடிய நோயாக, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா இன்று வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒமைக்ரான் என்கிற உருமாறிய கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய டெல்டா வகையை விடவும் இது வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் பரவல் பல மடங்கு உயர்ந்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் எல்லா வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே மாவட்ட அரசு புது வித யோசனையை செய்துள்ளது. இது பலரையும் கவரும் வண்ணம் உள்ளது.
அதன்படி, "கோவிட் இல்லாத கிராமமாக" மாற போகும் கிராமங்களுக்கு 50 லட்சம் வெற்றி பரிசு தரவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடக்க உள்ளது. இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று அரசு தரப்பில் நம்புகிறது. மேலும் இதில் சிறப்பாக செயல்பட கூடிய டாப் 3 கிராமங்களை தேர்ந்தெடுத்து, அவற்றின் கிராம வளர்ச்சிக்காக 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Also read:
விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை 22 கூறுகளின் அடிப்படையில் கண்காணிக்கப்படும். அவற்றின் அடிப்படையில் சிறந்த கிராமங்களுக்கு வெற்றி பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் பரிசாக 50 லட்சமும், இரண்டாம் பரிசாக 25 லட்சமும், மூன்றாம் பரிசாக 15 லட்சமும் வெற்றி பெறும் கிராமங்களுக்கு வழங்கப்படும். இதை குறித்து பூனேவின் தலைமை அதிகாரி ஆயுஷ் பிரசாத்திடம் கேட்டபோது, "பூனே மாவட்டத்தில் உள்ள கிராமங்களை கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கவே இப்படியொரு நடவடிக்கையை கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read:
Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!
மேலும் இந்த போட்டியில் வெல்லும் டாப் 3 கிராமங்களுக்கு அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அந்தந்த கிராமங்களுக்கு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செய்ய முடிவெடுத்துள்ளோம்" என்று பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடவடிக்கைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படி செய்வதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும். இந்த புது முயற்சிக்கு காவல் துறை மற்றும் சுகாதார துறையும் உறுதுணையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.