இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பலரும் அதி புத்திசாலிகளாகவே வளர்ந்து வருகின்றனர். சிறு வயது முதலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர். பல்வேறு பயிற்சிகள், வகுப்புகள் போன்றவற்றை ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விடுகின்றனர். குழந்தைகளும் இவர்களின் பயிற்சிகளுக்கு ஏற்ப அவற்றை கற்று கொள்கின்றனர். எல்லா குழந்தைகளும் இது போன்று எளிதில் கற்று கொள்வதும் இல்லை. ஆனால், பெரும்பாலும் இன்றுள்ள குழந்தைகள் நாம் சொல்லி தருவதை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளனர்.
இப்படிப்பட்ட வகையை சேர்ந்த குழந்தை ஒருவர் தான் சாதனை ஒன்றை செய்துள்ளார். மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோல்டோரைச் சேர்ந்த அத்ரேயி கோஷ் என்கிற சிறுமி, ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். இந்த சிறுமிக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. இவர் பாடுதல், நடனம் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் திறமையானவராக உள்ளார். அவரது தந்தை, அனிருத்தா கோஷ், மேற்கு வங்க காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் புருலியாவில் உள்ள டிஐபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுமி ஆத்ரேயியின் திறமையை தாய் சம்பாதி கோஷ் தான் கண்டறிந்து உள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அல்ட்ரா ரன்னர் என்கிற பந்தயத்தில் சுஃபியா கான் என்கிற பெண் தங்க நாற்கர நெடுஞ்சாலைகளை மிகக் குறுகிய காலத்தில் கடந்து கின்னஸ் உலக சாதனையை செய்தார். சுஃபியா 110 நாட்கள் 23 மணி நேரம் 24 நிமிடங்களுக்கு நெடுஞ்சாலைகளின் வலையமைப்பில் 6,002 கி.மீ ஓடினார்.
இந்த கடினமான பயணத்தை டிசம்பர் 16, 2020 அன்று புது தில்லியில் இருந்து தொடங்கினார். தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை தேசிய நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க் வழியாக இணைக்கும் கோல்டன் நாற்கர சாலையில் அவர் பயணித்தார். ஏப்ரல் 6, 2021 அன்று, முடிவு கோட்டை எட்டி சுஃபியா கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்றார்.
35 வயதான சுஃபியா டெல்லி விமான நிலையத்தில் தரைப் பணியாளராக முழுநேர வேலையில் இருந்தவர். இவரின் இந்த சாதனை குறித்து கேட்டபோது, "விமான நிலையத்தில் வேலை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது, அதனால் நான் எனக்கு ஏற்பட்ட விரக்தியை விட்டு வெளியேற ஓட தொடங்கினேன்," என்று சுஃபியா கூறினார். அவர் விரைவில் விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும், நீண்ட தூரத்தை கடக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
Also see... வாழ்க்கையில் வெற்றியடையும் ஆண்கள் காலையில் செய்யும் விஷயங்கள்... தவறாமல் கடைப்பிடியுங்கள்..!
இவரின் முயற்சியை வைத்து தான் ஆல்ட்ரா ஓட்டத்தைமுடிந்ததாகவும் கூறினார். விடா முயற்சியும், நினைத்த காரியத்தை செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் தான் இவர்களை போன்ற சாதனைகளை எட்டுவதற்கு ஏணியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Record