சந்திரபாபுவை பின்னுக்குத்தள்ளிய பேரன்...! 5 வயது சிறுவனுக்கு இவ்வளவு மதிப்புள்ள சொத்தா...?

5 வயது பேரனுக்கு 19 கோடி ரூபாய் சொத்து

 • Share this:
  தன்னைவிட தனது 5 வயது பேரனுக்கு 15 கோடி ரூபாய் சொத்து அதிகமாக இருப்பதாக ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

  சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்களை தெலுங்குதேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் நேற்று வெளியிட்டார்.

  இதன்படி, சந்திரபாபு நாயுடு சொத்துக்களின் நிகர மதிப்பு 3 கோடியே 87 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது பேரன் நாரா தேவன்ஸ், 19 கோடியே 42 லட்சம் ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார். மகன் லோகேஷுக்கு 19 கோடி ரூபாய்க்கும், அவரது மனைவி நாரா பிராமணிக்கு 11 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: