50 அடி போர்வெல் குழியில் விழுந்த 5 வயது சிறுமி... 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

50 அடி போர்வெல் குழியில் விழுந்த 5 வயது சிறுமி... 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
மீட்பு பணிகள்
  • News18
  • Last Updated: November 4, 2019, 11:21 AM IST
  • Share this:
ஹரியானா மாநிலத்தில் 50 அடி ஆழ போர்வெல் குழியில் தலை கீழாக விழுந்த 5 வயது சிறுமி, 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம் கர்னால் என்ற பகுதியில் 5 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாண்டு கொண்டிருந்த போது, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில், தலைகீழாக தவறி விழுந்தார்.

இதனை அடுத்து தீயணைப்பு படை, மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு சிறுமியை மீட்கும் முயற்சி நடந்தது. 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருந்த நிலையில், ஜே.சி.பி மூலம் பக்கவாட்டில் குழி தோண்டு சிறுமியை மீட்கும் முயற்சி நடந்தது.


இன்று காலை, சிறுமி மீட்கப்பட்ட நிலையில், உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சமீபத்தில், தமிழகத்தில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading