முகப்பு /செய்தி /இந்தியா / சேஷாசலம் வனப்பகுதியில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் - 5 தமிழர்கள் கைது

சேஷாசலம் வனப்பகுதியில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் - 5 தமிழர்கள் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த கூலி தொழிலாளர்களை போலீஸாரால் கைது செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 5பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அம்மாநில காவல்துறை  தீவிரமாக கண்காணித்து கடத்தல் சம்பவங்களை தடுத்து வருகிறது. செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சேஷாசலம் வனப்பகுதியில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அதிகாலையில் சிலர் செம்மரங்களை கார் ஒன்றில் கடத்தி சென்றதை கண்டனர். இதனையடுத்து அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீஸார் காரில் இருந்த 5 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 செம்மரக்கட்டைகள், ஒரு கார் ஆகியவை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Also Read : மதுவால் சீரழியும் குடும்பங்கள்.. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்- தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குமார், பெருமாள், பழனிவேல், கோபிநாத் மற்றும் சிவா என்று தெரியவந்துள்ளது. செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்- புஷ்பராஜ்

First published:

Tags: Andhra Pradesh