Home /News /national /

பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் தொண்டர்களுடன் குத்தாட்டம்!

பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் தொண்டர்களுடன் குத்தாட்டம்!

பிரச்சாரத்தின் போது ஆடிப்பாடும் போலீசார்

பிரச்சாரத்தின் போது ஆடிப்பாடும் போலீசார்

Telangana Election | தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்புக்குச் சென்ற போலீசார், ஆளும்கட்சித் தொண்டர்களுடன் உற்சாகமாக குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகிவருகிறது.

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என அவர்கள் உறுதியாக நம்புவதால் அக்கட்சித் தொண்டர்கள், பிரசார களத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர். அதற்கு சான்றாக, அக்கட்சியினர் பிரசாரத்தின்போது ஆடிப்பாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர்களுடன், போலீசாரும் சேர்ந்து குத்தாட்டம் போடுவதுதான் உச்சக்கட்டம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வடகிழக்கில், மிசோரமில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் எப்படியாவது அதைத் தக்க வைக்கும் நோக்கில், மது விற்பனை கொள்கையை மாற்ற முடிவு செய்துள்ளது. அங்கு, மது வாங்குவதற்கு பெர்மிட் வாங்குவது கட்டாயம். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுபான கட்டுப்பாட்டை விலக்குவது குறித்து தேவாலய நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லல்லியான்சுங்கா அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், சுவாமி நாம்தேவ் தியாகி எனப்படும் கம்ப்யூட்டர் பாபா சாமியார், ஆளும் பாஜக அமைச்சரவையில், அமைச்சராக பதவி வகித்தவர், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், நர்மதா நதியில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாதைக் குறிப்பிட்டு, அவரை ஏமாற்றுப் பேர்வழி எனக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, பாஜக-வுக்கு எதிராக தன் பரிவாரங்களுடன் ஊர், ஊராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 5 State Election, Telangana Election

அடுத்த செய்தி