Home /News /national /

5 மாநில தேர்தல் முடிவுகளால் கடும் அதிருப்தி... சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

5 மாநில தேர்தல் முடிவுகளால் கடும் அதிருப்தி... சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தேசிய அளவில் தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது.

தேசிய அளவில் தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது.

தேசிய அளவில் தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது.

    5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், சோனியா காந்தி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது.

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அனைத்து மாநிலங்களிலும் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் மாநில கட்சியாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    தேசிய அளவில் தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் சோனியா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க - 'மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் தோற்றுள்ளது' - கோவா தேர்தல் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

    இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு சோனியா காந்தி தலைமையில் கூடும் என்று அதன் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

    5 மாநில தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக கடினமாக உழைத்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தோல்விகளில் இருந்து பாடம் பெறுவோம். இந்திய மக்களின் நலனுக்கான காங்கிரசின் பணிகள் தொடரும். என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் கட்சி கரைந்தது ஏன்?

    பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ், மற்ற மாநிலங்களிலும் வாக்குகளைப் பெற தவறி விட்டது. 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி