Home /News /national /

கொரோனா பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி நடைபெறும் 5 மாநில தேர்தல்... தயாராகும் துணை ராணுவம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி நடைபெறும் 5 மாநில தேர்தல்... தயாராகும் துணை ராணுவம்

சிறப்பு அதிரடிப் படையினரும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    முதல்கட்டமாக துணை ராணுவமான மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 225 கம்பெனி படைகள் பல்வேறு கட்டங்களாக உத்தரப்பிரதேசத்திற்கு செல்லவுள்ளன. ஒவ்வொரு கம்பெனி படைகளிலும் சுமார் 120 வீரர்கள் வரை இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக உத்தரப்பிதேசத்தில் 27,000 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

    இதையும் படிங்க : இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

    இவர்கள் எங்கெங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளது. இதேபோன்று எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 70 கம்பெனி வீரர்களும், மற்ற துணை ராணுவத்தை சேர்ந்த சுமார் 85 கம்பெனி வீரர்களும் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

    இதையும் படிங்க : 11 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்- பீகாரில் அதிர்ச்சி- விசாரணைக்கு உத்தரவு

    இதேபோன்று சிறப்பு அதிரடிப் படையினரும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை, உள்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தற்போது வரை திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவாக உள்ளது. பிரசாரத்தின்போது, அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக்கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படவுள்ளனர்.

    இதையும் படிங்க : இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...
    Published by:Musthak
    First published:

    Tags: Election, Omicron

    அடுத்த செய்தி