Home /News /national /

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

முன்பை விட கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதால், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் பரவின.

முன்பை விட கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதால், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் பரவின.

முன்பை விட கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதால், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் பரவின.

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவதையொட்டி, அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படலாம் என சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது.

    முன்பை விட கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதால், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் பரவின. இதற்கிடையே, தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வற்காக துணை ராணுவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

    இதன் தொடர்ச்சியாக, துணை ராணுவத்தினர் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தின்போது இனி வரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் என்ன மாதிரியாக இருக்கும், தேர்தலை ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து பேசப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை வல்லுனர்கள், 5 மாநில சுகாதாரத்துறை செயலர்கள் உள்ளிட்டோரிடம் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தேர்தலை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

    தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 8.55 கோடிப்பேர்.

    மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகள் இந்த 5 மாநிலங்களில் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்கென தனி பூத்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் 1,620 பூத்கள் ஏற்படுத்தப்படும்.

    80 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நன் பாதிக்கப்பட்டோர், கொரோனா தொற்று உடையவர்கள் தபால் ஓட்டை செலுத்தலாம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரம் ஆகியவை பொருத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன.

    எங்காவது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால், வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த அடுத்த 100 நிமிடங்களுக்கு உள்ளாக தேர்தல் அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்தில் இருப்பார்கள். முறையான விசாரணை நடத்தப்படும்.

    தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரும் முன் களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள்.

    அரசியல் கட்சிகள் ஜனவரி 15-ம்தேதி வரையில் பேரணி, பொதுக் கூட்டம், வாகனப் பேரணி நடத்துவதற்கு அனுமதியில்லை. இந்த விதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெபறும். பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

    தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Election

    அடுத்த செய்தி