Home /News /national /

உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவு... சோனியா காந்தி அதிரடி

உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவு... சோனியா காந்தி அதிரடி

தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், உ.பி. பஞ்சாப் உள்பட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க பெறும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இங்குள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் மொத்தமே 18 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.

    இதையும் படிங்க - நேரு- காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமையிலிருந்து விலக வேண்டும் - கபில் சிபல்
     உத்தரப்பிரதேசத்தில் முன்பு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட 97 சதவீத இடங்களில் டெபாசிட்டை அக்கட்சி இழந்தது. பஞ்சாப் தோல்வியை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 2 ஆக குறைந்துள்ளது.


    தேசிய அளவில், பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துவந்தனர்.


    இதையும் படிங்க - உக்ரைனின் போர் பகுதியில் இருந்தும் இந்தியர்களை மீட்டுள்ளோம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

    இந்த நெருக்கடியான சூழலில் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட, கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற உத்தரவை சோனியா காந்தி இன்று வெளியிட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி