உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், தேசிய அளவில் 5 மாநில தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இந்தநிலையில், 5 மாநிலங்கள் தேர்தலில் எந்த கட்சி எங்கு வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அதில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் ஐந்துக்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை தனித்தே பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பா.ஜ.க 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 3 - 7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாடி 2 -5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Also read: ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 252 - 272 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாதி கட்சி 111 - 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 3-9 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பகுஜன் சமாஜ் 8-16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் நியூஸ் 18 நிறுவனம் நடத்திய போல் ஆப் போல்ஸ் ஆய்வு முடிவில் பாஜகவுக்கு 235 முதல் 249 தொகுதிகள் கிடைக்கும் என்றும் சமாஜ்வாடி கட்சி 137 முதல் 147 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 50 - 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 42-48 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜக 1-3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சி 54- 58 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 41-47 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜக 1-3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
பஞ்சாபில் தொங்கு சட்டசபை உருவாகக்கூடும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 57 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கும் என்றும் நியூஸ் 18 நிறுவனம் நடத்திய போல் ஆப் போல்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 31-37 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 30 - 36 இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி 2-4 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ரிப ப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 36 - 42 தொகுகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 25-31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 0-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பிலும், பாஜக 44 - 50 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி ஆமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 12 -15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி 5-8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு
கோவா மாநிலத்தில் பாஜக 19-23 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 4-8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி 5-9 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏபிபி - சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 17 - 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், 4-6 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் 8-11 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. 21 தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
பாஜக 18 முதல் 22 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என நியூஸ் 18 நிறுவனம் நடத்திய போல் ஆப் போல்ஸ் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 23-27 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 22-26 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஏபிபி - சிவோட்டர் கணித்துள்ளது.
ரிப ப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 31-37 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 13-19 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.
மணிப்பூரில் 27 முதல் 32 தொகுதிகளில் வென்று பாஜக முதலிடம் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களைப் பிடிக்கும் என்றும் நியூஸ் 18 நிறுவனம் நடத்திய போல் ஆப் போல்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எதிர்கட்சிகளின் வியூகம்.. பாஜகவுக்கு சாதகம்.. மீண்டும் 2017 தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2022, Punjab, Uttar pradesh