5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படும் நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக - சமாஜ்வாடி இடையே இருமுனை போட்டி நிலவினாலும், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம்- பகுஜன் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி நிலவுகிறது. எனினும் டெல்லிக்கு அடுத்தபடியாக அங்கு ஆம் ஆத்மிஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது.
70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே இழுபறி ஏற்படலாம் என கருதப்படுகிறது. 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவில் சீட் மறுக்கப்பட்டதால் பஞ்சிம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன், உத்பால் பாரிக்கர் வெற்றி பெறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிப்பூரை பொறுத்தவரை அங்குள்ள 60 தொதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2022, Election Commission, Goa, Manipur, Punjab, Uttar pradesh, Uttarkhand