Home /News /national /

'தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்கள் நலனுக்கான பணிகள் தொடரும்' - 5 மாநில தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து

'தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்கள் நலனுக்கான பணிகள் தொடரும்' - 5 மாநில தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். - ராகுல் காந்தி

    'தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம்' என்று 5 மாநில தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

    பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ், மற்ற மாநிலங்களிலும் வாக்குகளைப் பெற தவறி விட்டது. 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 5 இடங்களையாவது காங்கிரஸ் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க - பஞ்சாப் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி...

    அதேநேரத்தில் பஞ்சாபை தவிர்த்து மற்ற மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர்,கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக கடினமாக உழைத்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதையும் படிங்க - election results punjab 2022-மோடிக்கு பெரிய சவாலே அரவிந்த் கேஜ்ரிவால்தான் - ஆம் ஆத்மி ஒரு தேசிய சக்தி- ராகவ் சத்தா

    தோல்விகளில் இருந்து பாடம் பெறுவோம். இந்திய மக்களின் நலனுக்கான காங்கிரசின் பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தது. தற்போது பஞ்சாபில் ஆட்சி பறிபோயுள்ளதால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Congress, Election 2022, Rahul gandhi

    அடுத்த செய்தி