Home /News /national /

5 மாநில காங்., தலைவர்கள் ராஜினாமா.. காந்தி குடும்பத்தினர் பதவி விலக வலுக்கும் கோரிக்கை!

5 மாநில காங்., தலைவர்கள் ராஜினாமா.. காந்தி குடும்பத்தினர் பதவி விலக வலுக்கும் கோரிக்கை!

பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறப்பட்ட உத்தராகண்ட்டில் மட்டும் 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.

பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறப்பட்ட உத்தராகண்ட்டில் மட்டும் 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.

பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறப்பட்ட உத்தராகண்ட்டில் மட்டும் 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.

    5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, காந்தி குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

     உத்தரப் பிரதேசம்., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரா கண்ட் ஆகிய 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தோல்வி மட்டுமல்லாமல் அக்கட்சியின் வாக்கு வங்கியும் பெரும் சரிவை கண்டுள்ளது.

    பஞ்சாபில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அக்கட்சிக்கு 15 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.  கோவாவில் கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் 2022 தேர்தலில் 6 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது.

    Also Read : பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது - சோனியா காந்தி காட்டம்

    உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே செல்வாக்கு பெருமளவு குறைந்திருந்த நிலையில், கடந்த தேர்தலை விட தற்போது மேலும் 4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் இழந்து வெறும் 2 இடங்களில் வென்றுள்ளது.



    மணிப்பூரில் 2017 - ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் தற்போது, அக்கட்சி 19 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது.  பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறப்பட்ட உத்தராகண்ட்டில் மட்டும் 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.  தோல்வியடைந்த 5 மாநில தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

    அடிமட்டத்தில் உள்ள பிரச்னைகளை காங்கிரஸ் களையாமல் இருப்பதும், இந்துத்துவா என்ற ஆயுதத்தை பா.ஜ.க எடுக்கும் போது, அதற்கான மாற்றை முன்வைக்காமல் இருப்பதும் தோல்விக்கான முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

    தோல்வியை தொடர்ந்து கட்சியில் களையெடுக்க தொடங்கியிருக்கிறார் தற்காலிக தலைவர் சோனியா காந்தி. இது ஒரு புறம் இருக்க காந்தி குடும்பத்தினர் அனைவரும் கட்சி பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழ தொடங்கியுள்ளது. G-23 என்றழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் மட்டுமல்லாமல் நடுநிலை வகிக்கும் அரசியல் நோக்கர்களும், விரைவில் தேர்தல் நடத்தி கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Election 2022, Punjab, Rahul gandhi, Sonia Gandhi

    அடுத்த செய்தி