ஹோம் /நியூஸ் /இந்தியா /

விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: விமானி உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்!

விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: விமானி உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்!

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா

இந்த அசிங்கமான சம்பவத்தால் அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விமானத்தில் மூதாட்டி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் விமானி உட்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு வந்துகொண்டு இருந்த விமானத்தில் மதுபோதையில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தினரிடம் புகார் அளித்தார். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர். மேலும், அவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, இந்த சம்பவத்தை விமான ஊழியர்கள் சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒரு விமானி மற்றும் விமானத்திலிருந்த 4 பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Air India