ஹோம் /நியூஸ் /இந்தியா /

பில்கிஸ் பானு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் வேறு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக தகவல்

பில்கிஸ் பானு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் வேறு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக தகவல்

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

Gujarat Rape Case | குஜராத்தில் 5 மாத கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நன்னடத்தையை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் பரோலில் வந்தபோதே வேறு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத்தில் 5 மாத கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நன்னடத்தையை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் பரோலில் வந்தபோதே வேறு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் கலவரம் வெடித்தது. குஜராத் மாநிலம் முழுவதும் ஏராளமான இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராந்திக்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டிக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த குழந்தை உள்பட 12 பேரை கொடூரமாக கொலை செய்தது.

  அத்துடன், 5 மாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணையும் அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதையடுத்து, கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

  இதையும் படிங்க : சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் ஆசையில் 8.20 லட்சம் ரூபாய் இழந்த பெண்!

  இதற்கிடையில், அவர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், எஞ்சிய 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 14 ஆண்டு காலமாக சிறையில் இருந்த 11 குற்றவாளிகளும், தலா 3 ஆண்டுகள் வரை பரோலில் வந்து சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர்.

  இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குஜராத் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதியின் காரணமாக, நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க : நிதீஷ்குமார் தற்போதும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்- பிரசாந்த் கிஷோர் பகீர் குற்றச்சாட்டு

  இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான மிதேஷ் சிமன்லால் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு பரோலில் வந்தபோது, வேறொரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

  இதுதொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குஜராத் அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Gujarat, Gujarat rape case