• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சமையல் வேலைக்காக அழைத்துச் சென்று இரு பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் - அதிர்ச்சி சம்பவம்

சமையல் வேலைக்காக அழைத்துச் சென்று இரு பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் - அதிர்ச்சி சம்பவம்

Gang Rape

Gang Rape

மண்டபத்துக்கு அவ்விரு பெண்களையும் அழைத்துச் சென்ற இந்தர் மாலி என்ற நபர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பெண்கள் இருவரையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

  • Share this:
திருமண வீட்டில் சமையல் வேலைக்காக அழைத்துவரப்பட்ட பெண்கள் இருவரை, ஐந்து நபர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் திருமண நிகழ்ச்சியில் பூரி சமைத்து தரும் பணிக்காக, அருகேயுள்ள ஷியோபூர் மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மைன்பூரி பகுதியில் உள்ள திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு அவ்விரு பெண்களையும் அழைத்துச் சென்ற இந்தர் மாலி என்ற நபர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பெண்கள் இருவரையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாதூனி எனும் கிராமத்தை அடைந்துள்ளனர்.

Also read:  மது குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் - அரசு அதிகாரியின் பகீர் லாஜிக்

அந்த கிராமத்தில் உள்ள விஜேந்திர சிங் என்ற நபரிடம், அப்பெண்களை ஓப்படைத்துவிட்டு அந்த மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். விஜேந்திர சிங்கும், மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவரும் சேர்ந்து அப்பெண்கள் இருவரையும் மீண்டும் அந்த கிராமத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக் கூடாது என வாக்குறுதி அளித்த பின்னர் அப்பெண்கள் இருவரையும் விஜேந்திர சிங் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து வெளியேறிய அப்பெண்கள் இருவரும் நேராக மைன்பூரி காவல்நிலையத்தை அடைந்து நேற்றிரவு (நவம்பர் 18) போலீசாரிடம் நடந்தவற்றை கூறி ஐந்து பேர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

Also read:   அரசியல்வாதி மீது செக்ஸ் புகார் எழுப்பிய சீன டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மாயம்! - அதிர்ச்சியில் சக நட்சத்திர வீராங்கனைகள்

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், ஐந்து பேர் மீதும் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் ஐந்து பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: