HOME»NEWS»NATIONAL»5 killed in karnataka tractor road accident near hosur vai

ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து– கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் உள்ள சிவன் கோயிலுக்கு, பக்தர்கள் வந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

  • Share this:

கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டம் கேரளாலு சந்திரா கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் தமிழக கர்நாடக எல்லையான தெப்பகுளி பசவேஸ்வரா கோயிலுக்கு, டிராக்டரில் சென்றனர். அப்போது மஞ்சகொண்டபள்ளி என்ற இடத்தில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் அஞ்செட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் புட்டலிங்கம்மா, கவுரம்மா, மல்லிமா என்று 3 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமணமாகி முப்பதே நாட்களில் இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: