முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்! உச்ச நீதிமன்றம் அதிரடி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்! உச்ச நீதிமன்றம் அதிரடி

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

  • Last Updated :

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் மாதம் முதல் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம், ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில சட்டசபையின் அனுமதியின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரிக்கப்பட வேண்டும். இந்த மனு ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படவேண்டும். சட்டப் பிரிவு 370 தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து வழக்குகள் தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சொலிசிடர் ஜென்ரல் துஷார் மேத்தா, ‘ அறிவிப்புகளை வெளியிட வேண்டாம். நோட்டீஸ் அனுப்புவது எல்லை தாண்டிய தாக்கங்களை ஏற்படுத்தும். அதனால், பிறநாடுகள் இந்த விவகாரங்களில் எல்லைமீறக் கூடும்’ என்று தெரிவித்தார்.

இதுபற்றி தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். ஐ.நாவுக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று குறிப்பிட்டிருந்தது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘இதுதொடர்பாக ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

Also see:

top videos

    First published:

    Tags: Kashmir