இடிந்து விழுந்த ரயில் நிலைய கட்டடம்... பயணிகள் அதிர்ச்சி...! - வீடியோ

இடிந்து விழுந்த ரயில் நிலைய கட்டடம்... பயணிகள் அதிர்ச்சி...! - வீடியோ
இடிந்து விழுந்த ரயில் நிலையம்
  • News18
  • Last Updated: January 5, 2020, 10:14 AM IST
  • Share this:
மேற்கு வங்கம் மாநிலம் பர்த்வான் ரயில் நிலைய கட்டடத்தின் முன்பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலம் பர்த்வான் ரயில் நிலையம், அம்மாநிலத்தின் மிகவும் பிஸியான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். கொல்கத்தாவில் இருந்து டெல்லி செல்லும் வழித்தடத்தில் உள்ள இந்த ரயில் நிலையம் கிழக்கு ரயில்வேயின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் ரயில் நிலைய கட்டடத்தில் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடத்தில் பராமரிப்பு பணி நடந்து வந்ததாகவும், இதனால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் அதிகம் கூடும் இங்கு விபத்து நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: January 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading