விமானப்படை ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் - 5 அதிகாரிகள் குற்றவாளிகள்

news18
Updated: August 24, 2019, 8:30 AM IST
விமானப்படை ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் - 5 அதிகாரிகள் குற்றவாளிகள்
சுட்டு விழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் (ANI)
news18
Updated: August 24, 2019, 8:30 AM IST
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று விசாரணை அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாத இயக்கங்களின் முகாம் மீது குண்டு வீசியது. இதில், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து மறுநாள், பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.

இந்த பதற்றமான சூழலில், காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே இந்திய விமானப்படையின் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 வீரர்களும் பலியாகினர். விபத்துக்குள்ளான எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு அமைப்பினால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்தன.


மக்களவை தேர்தல் வரை இது தொடர்பாக எந்த தகவலையும் விமானப்படை அறிவிக்கவில்லை. தேர்தல் முடிவடைந்ததும் இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு பிரிவால், எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக விசாரிக்க குழுவும் அமைக்கப்பட்டது.

எதிரி நாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவற்றை கண்காணித்து அழிக்க, இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான விமான தடுப்பு பாதுகாப்பு அமைப்பை இந்தியா பயன்படுத்துகிறது. இதில் ஏற்பட்ட கோளாறே விமானப்படை ஹெலிகாப்டர், தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், இந்த பாதுகாப்பு அமைப்பின் மீதும் கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் 5 விமானப்படை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அலட்சியத்தினாலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாலும் தவறுதலாக இந்த ஹெலிகாப்டரை சுட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Loading...

"ஒரு குழு கேப்டன், இரண்டு விங் கமாண்டர்கள் மற்றும் இரண்டு விமான லெப்டினன்ட்கள் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள், விமானப்படை விசாரணை நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்" என தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...