மும்பை சி.எஸ்.டி ரயில் நிலைய நடைமேம்பாலம் இடித்து விபத்து...! 5 பேர் உயிரிழப்பு

Mumbai Footover Bridge Collapse | உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

news18
Updated: March 15, 2019, 10:01 AM IST
மும்பை சி.எஸ்.டி ரயில் நிலைய நடைமேம்பாலம் இடித்து விபத்து...! 5 பேர் உயிரிழப்பு
உடைந்த நடைமேம்பாலம்
news18
Updated: March 15, 2019, 10:01 AM IST
மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையமானது மாநிலத்தின் மிக முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. இன்று மாலை பரபரப்பான நேரத்தில் முதல் நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்தின் வெளியே செல்லும் நடைமேம்பாலத்தின் தரைப்பகுதி பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
உடனடியாக, மீட்புக்குழுவினர் வருகை தந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர். 23 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Loading...
இதில், 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டு மும்பையில் எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...