கர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

கர்நாடகத்தில் பேருந்தில் தீ விபத்து...பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு
கர்நாடகத்தில் அதிகாலையில் பேருந்தில் தீவிபத்து
  • Share this:
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து அதிகாலையில் தீப்பிடித்தது.

தீ விபத்து ஏற்பட்ட பேருந்தில் 32 பயணிகள் பயணித்துள்ளனர். 4ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் ஹிரியூர் தாலுக்காவை அடுத்த இடத்தில் செல்லும்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே தீ விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading